தாய்ப்பாலில் நஞ்சு
ஈழம்
நம்மௌனம்
தாய்ப்பாலில் நஞ்சு
புத்தக வெளியீடு
நாள்: நவம்பர் 14, சனி மாலை 4. 30
இடம்: தொன்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி,
காசாமேஜர் சாலை, எழும்பூர், சென்னை 8
ஆக்கம்:
கமல்ஹாசன், சத்குரு ஜக்கி வாசுதேவ், வைரமுத்து, கனிமொழி, சூர்யா, சத்தியராஜ், பிரகாஷ் ராஜ், நந்திதாதாஸ், பேராயர் சின்னப்பா, ஏ. ஆர். ரஹ்மான், அப்துல் ரஹ்மான், அனிதா பிரதாப், அருந்ததி ராய், நக்கீரன் கோபால், ஏ.ஆர். முருகதாஸ், இயக்குநர் சேரன், பாலாஜி சக்திவேல், தாமரை, பாலா, சீமான், அமீர், மிஸ்கின், அஜயன் பாலா, அழகிய பெரியவன், நா. முத்துகுமார், அறிவுமதி, தபூ சங்கர், யுகபாரதி, கபிலன், லிங்குசாமி, இன்குலாப், பா. விஜய், ரஜினிகாந்த், இவர்களோடு முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்கரை.
நல்லோர் பதிப்பகம் நாம்
போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு
5 comments

Labels: ஈழம், நல்லோர் பதிப்பகம், புத்தக வெளியீடு
5 comments
சிலை கலாசாரம் - சர்வக்ஞர்

உலகம் முழுக்க பல பிரபலங்களின் சிலைகள் எதிர்கால சந்ததிகள் அப்பெரியோர்களை அறிந்துகொள்ள வேண்டுமெனும் காரணத்தால் நிறுவப்படுகின்றன. அவர்களைப் பற்றிய மகத்துவம் பொருந்திய விபரங்களை எத்தனை பேர் நினைவுகூர்கிறோம். சிலைகள் எதற்காக வைக்கப்படுகின்றன? வைக்கப்படுவதன் நோக்கம் நிறைவேறுகிறதா?
சிலை கலாசாரம் மக்களின் வாழ்வோடு என்றோ எப்போதோ வேரூன்றி விட்டது. நண்பர்களோ, காதலர்களோ மெரீனா கடற்கரையில் சந்திக்க வேண்டுமா? இவ்வளவு பெரிய கடற்கரையில் எங்கே கண்டுபிடிப்பது? காந்தி சிலை அருகில் இத்தனை மணிக்கு இருக்க வேண்டும் என்று சொன்னால் சந்திப்பு சுலபம். சிலை வைக்கப்பட்ட பெருமகனார்கள் இப்படியெல்லாமும் உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
கர்நாடகத்தில் தோன்றிய கன்னடக் கவிஞர்களுள் முக்கியமானவர் சர்வக்ஞர். சென்னை அயனாவரம் பூங்காவில் சர்வக்ஞரின் சிலை இந்த ஆகஸ்ட் மாதம் நிறுவப்பட்டது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா அங்கிருந்த வண்ணமே வீடியோ கான்பரென்ஸ் மூலமாக சிலையைத் திறந்துவைத்தார். எப்படியோ கர்நாடகத்தில் வருடக்கணக்காக மூடிக்கிடந்த திருவள்ளுவர் சிலையைத் திறந்தாயிற்று. இங்கே சர்வக்ஞர் சிலை திறப்பு என்னும் பண்டமாற்று மூலமாக. சமாதானத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சண்டையை நிறுத்தினால் போதும். அதுவும் மொழிக்கான சண்டையை நிறுத்தினால் புண்ணியம். இத்துடன் நில்லாது இருவரின் இரு மொழிகளிலுமுள்ள சிறந்த படைப்புகளை மக்கள் அறியும் வகையில் வைக்கலாம்.
சர்வக்ஞர் என்றால் அனைத்தும் அறிந்தவர் என்று பொருள். சர்வக்ஞரின் காலம் குறித்து சரியாகச் சொல்ல இயலவில்லை. அவரின் எழுத்து ஆய்வுகளின் மூலம் அவரின் காலத்தை 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் என்று சொல்லலாம் என்கின்றனர். இவரின் இயற்பெயர் புஷ்பதத்தா. இவரின் தந்தையார் சைவபிராமணர். தாயார் ஒரு விதவைப்பெண். அவரின் பெயர் மாலி. இவரின் தந்தை காசிக்குச் செல்ல புனிதப்பயணம் மேற்கொள்கையில், இவரின் தாயாரை கர்நாடகாவின் தர்வார் மாவட்டத்தில் சந்தித்தார் எனச் சொல்லப்படுகிறது.
1000 க்கும் மேற்பட்ட செய்யுள்களை இவர் படைத்துள்ளார். திருக்குறள் 1330 குறள்கள் அனைத்தும் இரு வரிகளில் இருப்பது போல் இவை அனைத்தும் மூன்று வரிகளில் இருக்கும். இவரது செய்யுள் மதம், நீதி, வானியல், நடைமுறை வாழ்க்கை, கால அறிவு, புதிர் என பலவகைகளைப் பேசுகின்றன. இவரின் வசனங்கள் அறிஞர்களாலும், சாதாரண மக்களாலும் அன்றாட வாழ்க்கையில் சொல்லப்படுகின்றன.
திருக்குறளைப்போலவே இவரின் வசனங்கள் காலங்கள் கடந்தும், இன்றைய காலத்துக்கும் பொருத்தமானவையாக இருக்கின்றன.
இவரின் ஒரு செய்யுள் நட்பையும் மொழியையும் தொடர்புப்படுத்திப் பேசுகிறது. ஒரு மனிதன் இன்னொருவருடன் எவ்விதம் தொடர்புகொள்ள முடியும். மொழியின் மூலமாகவே இது சாத்தியமாகும்.
மலர்களில்லாத சேவை
குதிரை இல்லாத அரசன்
மொழி அறியாத நட்பு பயனற்றது.
இதில் முத்தாய்ப்பாக மொழி அறியாத நட்பு பயனற்றது என்கிறார். நடைமுறைப் பேச்சுக்காக மட்டும் இதை அவர் குறிப்பிடவில்லை. அறிவு சார்ந்த விவாதங்களுக்கும், கலந்துரையாடல்களுக்கும்கூட மொழி அவசியம் என்பதாலேயே இவ்விதம் குறிப்பிடுகிறார்.
சர்வக்ஞர் எல்லோரையும் போல் ஒரே விதமாகத்தான் செய்யப்பட்டிருக்கிறான்
ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு ஞானம் என அறிந்து
ஞானமலையாகிவிடுகிறான்
இதிலும் தன்னைப் பற்றிக் கூறிய குறிப்பாகவும் எடுத்துக்கொள்ளலாம். தான் எல்லோரையும் போல் செய்யப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு ஞானத்தைப் பெற்று தான் சர்வக்ஞர் ஆனதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
இராமாயணத்தில் வாலியைக் குறித்துச் சொல்லும்போது எதிரில் எவர் வந்தாலும் வாலிக்கு அவரின் பலம் கிடைத்துவிடும் என்று சொல்லபப்ட்டிருக்கும். இந்த செய்யுளில் சர்வக்ஞர் அறிஞர்கள் குறித்து சொல்கையில் எல்லா மக்களையும் போல்தான் அறிஞனும் செய்யப்பட்டு இருக்கிறான். ஆனால், அவன் ஒவ்வொருவரிடமிருந்தும் ஞானம் பெற்று ஞான மலையாகிவிடுகிறான் என்கிறார் இச்செய்யுளில். சர்வக்ஞரும் இவ்விதம் ஞானம் பெற்றவரே. தலைசிறந்த ஞானம்.
அவரின் சில செய்யுள்களின் தமிழாக்கத்தினை இங்கே பார்க்கலாம்.
இராமாயணத்தில் இராவணனின் கலக்கம் குறித்து சொல்கையில், 'கடன் பெற்றார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று கம்பன் சொல்வார். கடன் வாங்கியவனின் மனம் அப்படி துன்பப்படும் என்பது அன்றிலிருந்து இன்று வரை மட்டுமல்ல இனிவரும் காலங்களிலும் துன்புறுத்தும் என்பது நிதர்சனமான உண்மை. இப்போது தனி மனித கடன், அலுவலகக் கடன் போன்ற கடன்களையெல்லாம் கடந்து இந்திய தேசத்தின் கடன், பிறக்கப்போகும் குழந்தைகளின் தலையில்கூட பிறக்கும் முன்பே சுமத்தப்படும் நிலையில் இருக்கிறோம். கடன் குறித்தும் இவர் எழுதுகிறார்.
கடன்பெறும்போது பாலும் தேனும் உண்பதுபோலிருக்கிறது
கடன் அடைக்கும் சமயத்தில்
உடலின் எலும்புகள் நொறுங்குவது போலிருக்கின்றது
உண்மைதானே. கடன் பெறும்போது இனிக்கத்தான் செய்கிறது. கொடுக்கும்போதல்லவா வலிக்கிறது. இப்போதும் இதேநிலை நிலவுவதுதானே யதார்த்தமாயிருக்கிறது.
முட்டாள்களின் மனம் குறித்தும் வசனம் படைக்கிறார். ஒரு முட்டாளுக்கு எத்தனை முறை அறிவுரை சொல்லலாம். ஒருமுறை, இரண்டு முறை, மூன்று முறை...... நூறுமுறை... அல்லது அதற்கும் மேல்... எத்தனை முறை சொன்னாலும் அவனால் புரிந்துகொள்ள முடியுமா? அதற்கு அவர் அளிக்கும் உவமையின் அழகைப் பாருங்கள். அதை மட்டுமா சொல்கிறார். முட்டாள் எதையேனும் சொன்னால் வாதம் செய்யாதே ஒத்துக்கொள்வது நல்லது என்கிறார்.
ஒரு முட்டாளுக்கு நூற்றுக்கணக்கான முறை அறிவுரை சொல்வதால் என்ன பயன்
நூறு வருடங்கள் கற்பாறையில் மழை பொழிவது போன்றது அது
அது எப்போதேனும் நனையுமா
*
ஆறுமலைகளைத் தாண்டிக்குதித்தேன் என முட்டாள்கள் கூறினால்
அதை அங்கீகரித்து விடலாம்
அதை எதிர்த்து வாதம் செய்வதைவிட இது சிறந்தது
வாழ்க்கையின் பாடங்களைக் கற்றுக்கொள்ளும் விதத்தை மிக எளிமையாக விளக்குகிறார். மேலும் மனிதர்களின் செயல்களை வைத்து மூன்றுவகை மனிதர்களாகப் பிரிக்கிறார். முதல்நிலை மனிதன், இடைநிலை மனிதன், கடைநிலைமனிதனின் இலக்கணத்தை எடுத்து இயம்புகிறார்.
அறிந்தவர்களிடமிருந்து சிறிதேனும் கற்றுக்கொள்;
செயல்புரிபவர்களை சிறிதேனும் கவனி;
சுய அனுபவத்தால் மீதியைக் கற்றுக்கொள்.
*
செய்த தர்மத்தை விளம்பரப்படுத்தாதவன் உயர்ந்தவன்
கொடுத்துவிட்டு அதைப் பற்றிப் பேசுபவன் மத்யமன்
அயோக்கியனே எதையும் அளிக்காமல் பேசிக்கொண்டே இருப்பான்
கோவிலைச் சுற்றுவது, விபூதி இடுவது, சந்தனம் பூசுவது, நதியில் மூழ்குவது இவை செய்யும்போது மன சுத்தம் இல்லாமல் எதற்காக இதைச் செய்கிறோம் என்ற உணர்வில்லாமல் செய்வதால் எந்த பயனும் இல்லை என்பது குறித்து எழுதியுள்ளார். வாசியுங்கள்.
எந்த உணர்வுமின்றி கோவிலைச் சுற்றுவதால் என்ன பயன்
எருது எண்ணெய் செக்கை
சுற்றுவதற்கு ஒப்பானது அது
*
சாம்பலை தரிப்பதால்
ஒருவன் சொர்க்கத்துக்கு செல்வானென்றால்
ஒரு கழுதை நிச்சயமாய் அங்கு சென்றுசேரும்
*
தினமும் நதியில் மூழ்கிஎழுவதால்
சொர்க்கத்துக்கு செல்வான் என்றால்
நீரில் பிறந்து நீரில் வாழும் தவளை நிச்சயம் சொர்க்கத்துக்கு செல்லும்
*
சந்தனத்தை நெற்றியில் அணிவதால்
ஒருவன் சொர்க்கத்துக்கு செல்வானென்றால்
சந்தனத்தை அரைக்கும் கல்லும் நிச்சயம் சொர்க்கத்துக்கு செல்லும்
என்ன ஒரு வெளிப்படையான கருத்து. இன்றைக்கும் என்றைக்கும் இதை மறுக்க முடியுமா? காலம் கடந்தும் மனிதர்கள் மனதில் நிற்கவேண்டிய கருத்துகளை அருள்பவர்கள் பெரியோராகப் போற்றப்படுவார். அந்தவகைப் பெரியோரான சர்வக்ஞரின் கருத்துகள் தமிழிலும் சொல்லப்பட்டு மக்கள் அதனை அறிந்துகொள்ள வேண்டும். மொழிகளின் பெயரால் சண்டைகளின்றி சமாதானம் நிலவ வேண்டும். மொழி என்பது மக்களின் மனங்களை இணைக்கும் கருவியாக இருக்க வேண்டுமே தவிர மக்களைப் பிரிக்கும் சண்டையில் பிணைப்பதாக இருக்கக்கூடாது.
(பி.கு) The attached file is His manuscript.

18 ஆம் நூற்றாண்டில் அவரால் எழுதப்பட்டது; பாதுகாக்கப்படுகிறது.
Labels: சர்வக்ஞர், சிலைகலாசாரம்
10 comments
வலைப்பதிவாளர்களே இது உண்மையா?
நேற்று திங்கள்கிழமை
இன்றைக்கு செவ்வாய்கிழமை
நாளை புதன்கிழமை
சனி, ஞாயிறு விடுமுறைக்குப்பிறகு வரும் திங்கள், செவ்வாயில் வலைப்பதிவு பதிவுகளுக்கு அதிகமான கமெண்ட்கள் கிடைக்குமா?
புதன்கிழமை அதிக பின்னூட்டங்கள் கிடைக்காதா?
இங்கே இப்படி சொல்லியிருக்கிறார்களே?
வாரத்தில் புதன்கிழமை நிஜமாகவே ஜனங்களுக்கு ஆகாத நாளா?

இது வலைப்பதிவுகளில் உலவுபவர்களுக்கு மட்டுமா? அல்லது எல்லா துறை சார்ந்த பணிகளுக்கும் இந்நிலையா? திங்கள், செவ்வாய் இரு நாட்களிலேயே அடுத்த சனி, ஞாயிறு விடுமுறையை எதிர்நோக்கும் மனநிலை பணிபுரிபவர்களுக்கு வந்துவிடுகிறதா? புதன்கிழமை ஏன் சோகநாளாகிறது?

ட்விட்டர், வலைப்பதிவு உபயோகிப்பவர்களே இது உண்மையா?????
பின்னே பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற சொலவடை எப்படி வந்தது?
29 comments

Labels: புதன்கிழமை
29 comments
Cast away - தனித்தீவில்...
தபால், பொருள்களை கொரியரில் அதன் விலாசத்தில் கொண்டு சேர்க்கும் பணியில் இருப்பவன் கதாநாயகன். விமானத்தில் பயணம் செய்யும்போது விமானம் கடலின் மேல் செல்கையில் விபத்துக்குள்ளாகிறது. அவன் தனியனாக தீவு என்று சொல்லப்படும் ஒரு சின்ன திடலில் கரைசேர்கிறான். நான்கு வருடங்கள் தனியனாக அங்கே அவன் சிரமங்களை எதிர் கொள்வதும், சூழலைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு எப்படியோ தனதிடத்திற்கு வந்து சேர்வதுமே கதை.
படம் ஆரம்பித்ததிலிருந்து இரைச்சலும், ஒலியின் கலவையும் அதிக தூக்கல். பின்னால் தீவின் அமைதியும், தனிமையும் காட்டப்படவேண்டுமென்று இத்தனை இரைச்சல்களோ என்னவோ. விடைபெறும்போது காதலி அவனுக்கு தன்னுடைய படம் பொருத்திய கடிகாரம் பரிசளிக்கிறாள். (இனியதாய் முத்தமிட்டு விடைபெறுகிறார்கள். இரு முத்தக் காட்சிகள் இயல்பாய் மிகஅருமை) அதை
கையிலேயே வைத்திருக்கிறான். விமானம் விபத்துக்குள்ளாகும்போதும் அதைக் காப்பாற்றத் துடிக்கிறான். விமானம் விபத்துக்குள்ளாகிறது. கடலில் வீழ்கின்றனர். கடலும் அதன் பிரம்மாண்டமும், மழையும் இருளும் கலந்து பேயாட்டம் ஆட இவன் ஒரு மிதவையில் எப்படியோ கரை ஒதுங்குகிறான்.
அப்பப்பா! தனியே அங்கே அவன் தவிப்பது...
சுற்றிலும் அழகு நிறைந்த பசிபிக் கடல். அழகிய தூய்மையான தனியான பகுதி. இப்படி யாருமே இல்லாத இடம்தானே காதலர்களுக்கு தேவையான இடம்கூட. ஆனால் தனியாக அல்லவா இருக்கிறான். பேச்சுத்துணைக்கு ஆளில்லை. தானாகவே பேசிக்கொள்கிறான். தனது காதலியின் புகைப்படத்தை
வைத்துக்கொண்டிருக்கிறான். விபத்தில் கரைஒதுங்கும் கொரியர் தபால்களையும் பிரித்து பொருட்களை உபயோகித்துக் கொள்கிறான். ஒரு பந்து கிடைக்கிறது. சரி சரி. முழுகதையும் சொல்லவில்லை.
மிதவையில் கடலைக் கடந்துவிட நினைக்கிறான். பெரும் அலை அவனை உருட்டிப் புரட்டி இழுத்துச் சென்று மறுபடியும் கரைக்கு வந்துவிடுகிறான். கீழே விழுந்து கிடக்கும் தேங்காயை எடுத்து உரிப்பதற்குள் அவன்படும்பாடு. அதை உடைத்து நீர் பருகுவதற்குள் பாவம் அவன் எத்தனையோ வழிமுறைகளைப் பயில்கிறான். மீன், நண்டு என கிடைத்ததை அப்படியே சாப்பிடுகிறான். அது செய்கிறேன், இது செய்கிறேன் என்று கால்களில் காயம்.
நெருப்பை கடைந்தெடுக்க அவன் படும்பாடு. கைகளில் காயம். விடாமுயற்சிக்குப்பிறகு புகை கிளம்ப ஊதி ஊதி நெருப்புச் சுடர் கிடைத்தும் அவன் அடையும் இன்பம். அதை வளர்த்தெடுக்க சருகுகளை
அவன் இட்டு நெருப்பு வளர ஆரம்பித்ததும் ஐ மேட் பயர் என கூச்சலிடுவது எவ்வளவு சிரமங்களுக்குப் பிறகு ஒரு வெற்றி.
கையில் அடிபட்டதும் வலிபொறுக்கவியலாமல் பந்தை தூக்கியெறிகிறான். திரும்பி பந்தை எடுக்கையில் அதில் பட்டிருந்த ரத்தக்கறையில் கண், மூக்கு என வரைந்து எப்போதும் அருகில் வைத்துக்கொண்டு பேச ஆரம்பிக்கிறான்.
நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொன்றாக பழக்கப் படுத்திக்கொண்டு கரையொதுங்கும் பல பொருட்களைக்கொண்டு கட்டுமரம் செய்கிறான். கடலில் இறங்கிவிடுகிறான். பெரிய அலையைக் கடந்துவிடுகிறான். மழையில் சிக்கி, காற்றின் சுழலில் பாய்மரமாய் வைத்திருந்த தகடு பிய்த்துக்கொண்டு
போய்விடுகிரது. முகம் வரையப்பட்ட பந்தும் கடலில் சென்றுவிட அதைக் காப்பாற்ற அவன் எடுக்கும் பிரயத்தனம்... களைத்து சோர்ந்து சக்தியில்லாமல் கண்மூடிக்கிடக்க அருகில் செல்கிறது ஒரு பெருங்கப்பல்...
அடப்பாவி யாரும் இல்லாத தீவிலும், யாரும் கேட்கவேமுடியாமல் இருக்கையில் கடலைப் பார்த்தும் ஹெல்ப் எனக் கத்தினாயே, திரும்பிப்பார்... ஒரு குரல்குடு... என கத்தத் தோன்றுகிறது. மெதுவாகப் புரண்டு படுத்து விழிதிறக்கிறான். கப்பலைக்கண்டதும் குரல் எழுப்ப இயலவில்லை. கை மட்டும்
நீள்கிறது. முழு கப்பலும் அந்தக் கைமட்டும்... சரிதான்... கப்பலில் இருப்பவர்களால் காப்பாற்றப்பட்டு விட்டான் என்பது அடுத்த காட்சியில் தெரிகிறது. அவனுடைய காதலிக்கு தகவல் சொல்லப்படுகிறது. தொலைபேசியில் அத்தகவலைக் கேட்கும்போதே மயங்கி விழுகிறாள். இதற்குப் பிறகுதான் டுவிஸ்ட்.
அவள் இவனைத்தேடிவிட்டு காணாது இன்னொருவனை மணம் செய்துகொண்டு விடுகிறாள். அவளால் அவனை மறக்க இயலவில்லை. அழைத்துக்கொண்டு போய்த்தொலை என்று கத்தவேண்டும்போல இருந்தது... ஏய் அடங்கு என்று சொல்லிக்கொண்டேன். வேணாம். அவனுடைய இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. இதற்கு மேல் எழுத இயலவில்லை.
அவன் அவளிடம் பாதுகாத்துவைத்திருந்த அவளது புகைப்படத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறான். அவள் அவனின் கார் சாவியைக்கொடுக்க காரை எடுத்துச் செல்கிறான். ஆரம்பத்தில் எந்த நான்கு வழிப்பாதை காட்டப்படுகிறதோ அதே பாதையில் படம் முடிகிறது.
பாதித்ததை மட்டும் எழுதினேன். இயக்குநரோ மற்ற எவரின் பெயருமே குறிப்பிடவில்லை. இதுபோல தமிழ் படம் ஏதும் வந்துள்ளதா. வந்திருந்தால் பார்த்தவர்கள் சொல்லுங்கள். பார்க்க விரும்புகிறேன்.
7 comments

Labels: Cast away, தனித் தீவில், திரைப்படம்
7 comments
32 கேள்விகளா ?????
தம்பி இரவிசங்கர்கண்ணபிரான் அழைத்த நேரம் தொடர்பணி. ஆரம்பத்தில் எழுத விருப்பமில்லை. ஆனாலும் அன்பான அழைப்பினை மீற இயலவில்லை. எழுத உட்கார்ந்துவிட்டேன்.
எழுத ஆரம்பிக்கையில் தோன்றியது: சில சமயங்களில் இதுபோன்ற விளையாட்டும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. அழைப்புக்கு நன்றி இரவி.
கமலே இவங்க நாவலைத்தான் படிக்கிறாங்கன்னு எழுதியது ரொம்ம்ம்ம்ப ஓவரு. இந்த மண்டை காய்கிற வெயிலிலும் குளிர் ஜூரமாயிடுச்சு:) ஆனாலும் இதோ கண்ணு கலங்க சமாளிச்சுக்கறேன் தம்பியுடையாள் எதற்கும் அஞ்சாள்னு.
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
எனக்கு பெற்றோர் வைத்த பெயர் மஞ்சு. எனது தந்தையின் தாயாரின் பெயர் மஞ்சம்மாள். பாட்டியின் பெயர் பேத்திக்கு என்னும் வகையில் எனக்கு இந்தப் பெயரை வைத்திருக்கலாம். எல் கே ஜி வகுப்பில் என்னைச் சேர்க்க அழைத்துச் சென்றபோது அட்மிஷன் சமயத்தில் அங்கே பெயர் என்ன என்று கேட்டபோது மஞ்சுளாதேவி என்று சொன்னேனாம். எனக்கு நினைவில் இல்லை. அதனால் பள்ளியில் அந்தப் பெயரிலேயே சேர்த்திருக்கிறார்கள். எல்லா ரெகார்டும் இந்தப் பெயரில்தான் இருக்கிறது.
எழுத ஆரம்பித்தபோது மஞ்சு ரெங்கனாதன் என்னும் பெயரில் எழுத ஆரம்பித்தேன். என்னுடைய பெயரை ஏன் போடுகிறாய் என்று கணவர் ஒருமுறை சொல்லிவிட்டார். அதனால் கவிதை எழுத ஆரம்பித்தபோது வேறுபெயரில் எழுத முடிவு செய்திருந்தேன். எனது மெயில் ஐடி மதுமிதா என்னும் பெயரில் ஆரம்பித்திருந்தேன். கணவரின் நண்பரின் மகள் ஆரம்பித்துக்கொடுத்தார். திடுமென பெயர் கேட்டதும் எதுவும் தோன்றவில்லை. பலபெயர்களை அவள் கூறுகையில் மதுமிதா என வைக்கலாம் என்று முடிவு செய்தோம். சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' நாயகியின் பெயர் மதுமிதா. எனக்கும் பிடித்த பெயர் என்பதால் சரி என்று சொல்லிவிட்டேன்.
திசைகள் இதழில் ஒரு கட்டுரை எழுதுகையில் மது என்ற பெயரில் எழுதி அனுப்பியிருந்தேன். மாலன் அவர்கள் ஏன் மது என்று எழுதுகிறீர்கள். ஐடியில் மதுமிதா என இருக்கிறது. அது நன்றாகத்தானே இருக்கிறது என்று அந்தப்பெயரிலேயே இளம்பிறையின் நூல் வெளியீடு நிகழ்ச்சிக் கட்டுரையினை வெளியிட்டுவிட்டார். தொடர்ந்து அந்தப் பெயரிலேயே எழுதி வருகிறேன்.
மஞ்சு, மது, மதுமிதா என அவரவர்களுக்கு பிடித்த பெயரில் அழைப்பார்கள். எப்படி அழைத்தாலும் எனக்கு பிடிக்கும்.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
சரியாக நினைவிலில்லை. அழுகை என்பது மரத்துப்போயிருக்க வேண்டும். வாழ்க்கை அப்படித்தானே இருக்கிறது.
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கும். முன்பு நிறுத்திப்பிடித்து நன்றாக எழுதுவேன். ஒன்பது வருடங்களாக அதிகம் பேனா உபயோகித்து எழுதுவதில்லையாதலால் இப்போது எழுதுவது நன்றாக இல்லை என நினைக்கிறேன்.
4. பிடித்த மதிய உணவு என்ன?
வீட்டில் நானே சமைக்கும் எந்த உணவும் பிடிக்கும். இதுதான் பிடிக்கும் என்று தனிப்பட்ட விருப்பம் இல்லை.
சாதம், பருப்பு, சாம்பார், ரசம், வத்தக்குழம்பு, கறி, பொரியல், தயிர் என்று இருந்தாலும் பிடிக்கும். ஆனால், நம்புங்க கொஞ்சமாதான் சாப்பிடுவேன்.
வெறும் தயிர்சாதம் மட்டும் இருந்தாலும் பிடிக்கும்.
எதுவுமே சாப்பிடாமல் ஏதாவது ஒருவகை சுண்டல் மட்டும் சாப்பிட்டுவிட்டு, பழச்சாறு குடிக்க பிடிக்கும்.
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
பார்த்தவுடன் அனைவரிடமும் சுமுகமாகப் பேசிவிடுவேன். எல்லோரையும் நட்பாகத்தான் கருதுவேன். நாம் நேசிப்பவர்களுக்கும் பிறர் நம்மை நட்பாகக்கருதுவதற்கும் இருக்கும் வேறுபாட்டைப் புரிந்து கொள்ள பலவருஷங்கள் ஆகிப்போச்சு. காலம் நட்பு என்பதற்கு தனி அர்த்தம் கற்பித்திருக்கிறது.
6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
ஓடும் நீரில் குளிக்கப் பிடிக்கும்.
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகம்
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
எல்லோரையும் இப்போதுகூட பார்த்த உடனே நம்பி நேசித்துவிடுவது.
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
ரொம்ப பெர்பெக்ஷன்.
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
வருத்தம் இல்லாமல் இருக்க பழகிவிட்டது.
11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
கறுப்பில் வெளிர்தேன்நிறம் தெளிக்கப்பட்ட ஆடை.
12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
மடிக்கணினியைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். விசிறி (Fan) சுற்றும் சத்தம் மட்டும் கேட்கிறது. இதற்கு இடையே பதிவு போஸ்ட் செய்வதற்கு முன்னால், கீழே பக்கத்துவீட்டில் அடிபம்பு அடிக்கும் ஓசை. இந்த நேரத்திலா. பாவம் அந்தப் பெண்மணி என எண்ணம் ஓடுவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீலம்.
ஆமாம். ஏன் பேனாவாக மாற்ற வேண்டும்?
14. பிடித்த மணம்?
மனோரஞ்சித மணம், பன்னீர் பூ வாசம், மழைத்தூறலில் எழும் மண் வாசனை, சமைக்கும்போது தாளிச்சுக்கொட்டுகிற வாசனை..........
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
நான் பதிவுகளே இப்போதைக்குள் வாசிக்கவில்லை. அழைத்தால் யாருக்குப் பிடிக்கும் என்பதும் தெரியவில்லை. 27 ஆம் கேள்விக்கான பதிலும் ஒரு காரணம். யார் 32 இனை எழுதியிருக்கிறார்கள் யார் எழுதவில்லை என்பதே தெரியவில்லை என்பதால் இந்தப் பதிவினை வாசிக்கும் 32 கேள்விகளை எழுதாத பதிவர்கள் எழுதலாம் என அன்புடன் கூறி முடிக்கிறேன்.
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
பல முக்கிய பதிவுகள் இருக்கின்றன. ஆனாலும் கொஞ்சம் விளையாட்டான இந்தப்பதிவினைக் குறிப்பிடத் தோன்றியது.
சங்கம் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் "பிளாக்-காயணம்"!
17. பிடித்த விளையாட்டு?
இப்போது எதுவும் விளையாடவில்லை. ஓட்டம் பிடிக்கும். (இதுவும் விளையாட்டுதானே?)
தொலைக்காட்சியில் பார்க்க என்றால் டென்னிஸ். ஜிம்னாஸ்டிக்ஸ். இதுவும் இப்போது பார்க்கும் தருணங்களும் குறைவு.
18. கண்ணாடி அணிபவரா?
ஆம். புத்தகம் வாசிக்கையில் மட்டும்.
19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
உண்மையாக என்னை உணரச்செய்யும் திரைப்படம் பிடிக்கும்.
20. கடைசியாகப் பார்த்த படம்?
யாவரும் நலம்.
நான் தான் நலமில்லாமல் போய்விட்டேன். கதைக்களம், கரு, சஸ்பென்ஸ் கலையாமல் நகர்த்திச் சென்ற பாணி எல்லாம் வித்தியாசமான புதுமைதான். ஆனால், தொலைக்காட்சியிலும் அடுத்ததாய் கடைசியில் செல்லிலும் வரும் என்ற ஆவிகளின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து சொல்லப்படும்போது எரிச்சலைக் கொடுத்தது.
21. பிடித்த பருவ காலம் எது?
எல்லாகாலமுமே அதனதன் தனித்துவத்துடன் பிடிக்கும்.
சொல்லியே ஆகணுமென்றால் வசந்தகாலம்.
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
My Story - Kamaladas
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
நான் எப்போதுமே மாற்றியதில்லை.
24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
ஏகாந்தமாய் இருக்கையில் சின்னதாய் தொலைவில் கேட்கும் பறவைகளின் ஒலி, மெல்லிய இசை, கடல் அலை ஓசை, வருடிச் செல்லும் காற்றின் 'விர்ர்ர்ர்ர்' என்னும் சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன சத்தம் பிடிக்கும்.
பலத்த சத்தங்கள் செவிக்கு அலர்ஜி. இரைச்சலாய் இருக்கும் எந்த சத்தமும், வெடிகுண்டு வெடித்தல், ஒலிபெருக்கி அலறும் சத்தம் பிடிக்காது.
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
பெங்களூரு, கொச்சி, திருப்பதி.
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்க வேண்டும்தான். அதை மற்றவர்தான் சொல்லவேண்டும்.
நடந்த மனவருத்தம் தரும் நிகழ்வுகளை உடனே சுமப்பதை நிறுத்தி, நினைவில் கொள்ளாது, அடுத்து ஏதேனும் பணி செய்வது. ஆனாலும் அப்படிப்பட்ட நிகழ்வு குறித்து இன்னொருமுறை பேச நேர்கையில் அதே உணர்வுக்கு வந்துவிடுவது. (இது தனித்திறமையா என இன்னொரு கேள்வி கேட்கவேண்டாம்:))))) )
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
பிறரைத் துன்புறுத்துவது.
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
யோசித்தல்
உள்ளுக்குள் எழும் தொடர்கேள்விகள்
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
பூமி, பிரபஞ்சவெளிப்பாதை:)
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
எந்த சூழலிலும் நிதானம் தவறாமல் இருக்கவேண்டும். குழந்தைத்தனமும் மாறிவிடக்கூடாது.
31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?
கணவன் இல்லாமல் செய்ய விரும்பும் என்று இருக்கணுமோ?
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாழ்க்கை ஒரு புதிர் நிறைந்த விளையாட்டு விளையாடியே ஆகவேண்டும் என்பதால் அதை அப்படியே ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்கையில் மகிழ்ச்சியைத் தொலைத்துவிடாமல் இருக்கவும் பழகிக்கொள்ளவேண்டும்.
மாதத்திற்கு 30 இல்லையென்றால் 31 நாட்கள் மட்டுமே இருக்கிறதே. ஏன் 32 நாட்கள் இல்லையென்று யோசித்த நாட்கள் நினைவுக்கு வந்ததே. வந்ததே. வந்ததே :)))))
13 comments

Labels: 32 கேள்விகள்
13 comments
வீர் சாவர்க்கர்

வீர் சாவர்க்கர் - இலந்தை சு. ராமசாமி
பாரதீய ஜனதா ஆட்சியில் காந்தியின் புகைப்படத்துக்கு எதிரே ஒருமுறை சாவர்க்கரின் புகைப்படம் வைத்ததால் பாராளுமன்றத்தில் எழுந்த சர்ச்சை குறித்த செய்தியைப் பார்த்த பிறகே சாவர்க்கர் குறித்து இன்னும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது.
சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருக்கையில் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கோரியவர். அவரை எப்படி காந்தியுடன் ஒப்பிட முடியும். காந்தியின் மரணத்தில் இவரின் பங்கும் உண்டு என்பது போன்ற தொடர்ந்த சர்ச்சைகளைப் புதிது புதிதாய் கேள்விப்பட்டபோது ஆர்வம் அதிகரித்தது. ஆனால் தமிழில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
இப்போதுதான் இலந்தை ராமசாமி அவர்கள் எழுதிய வீர் சாவர்க்கர் படிக்கக் கிடைத்தது.
விநாயக் தாமோதர் சாவர்க்கர், வீர் சாவர்க்கராகப் பரிமாணமடைந்ததை சொல்லும் நூல். 16 அத்தியாயங்களில் சாவர்க்கர் குறித்து சிரத்தையுடன் எழுதப்பட்டுள்ளது. தெரிந்து கொள்ளத் தேவையான பல விபரங்கள் இதில் இருக்கின்றன.
வரலாறு ரீதியாக படைப்பு இருக்கையில் அதில் புனைவு கலந்திருப்பதாகத் தோன்றினால் வாசிக்கையில் உறுத்தும். உண்மையாய் நடந்த நிகழ்வுகள் சொல்லப்படுகையில் உண்மையாக இருக்க வேண்டும். சில இடங்களில் அருகில் நேரில் இருந்து பார்த்ததுபோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த இடங்களில் உண்மைத்தன்மை குறைந்து புனைவு கலக்கப்பட்டது போன்ற தோற்றம் தெரிகிறது. அதனால் எதிர்பார்ப்புடன் வாசிக்க ஆரம்பித்தது சில இடங்களில் கொஞ்சம் நெருடலாக இருந்தது.
சிறந்த கவிஞராக, சிறந்த சொற்பொழிவாளராக, சிறந்த எழுத்தாளராக, சிறந்த புரட்சி வீரராகவே வாழ்ந்திருக்கிறார் என நூல் முழுக்கச் சொல்லப்படுகிறார்.
சாதுர்யமான பேச்சும், நகைச்சுவை உணர்வும் சில இடங்களில் இயல்பாக வெளிப்படுகிறது.
சாவர்க்கரை பார்க்க வந்த ஒரு பிரபல பத்திரிகை நிருபர் அவரிடமே சாவர்க்கரைப் பார்க்க வேண்டும் என்கிறார்.
"நான் தான் சாவர்க்கர்"
"புரட்சிகரமாகன செயல்களால் லண்டனையே கலக்கிக்கொண்டிருக்கும் சாவர்க்கர் நடுத்தர வயதுள்ளவராக, ஆஜானுபாகுவாக, தாடிமீசையோடு இருப்பார் என்ரு நினைத்தேன் என்கிறார் நிருபர்.
"நீங்கள் எதிர்பார்த்தபடி நான் இல்லாமலிருப்பதற்கு வருந்துகிறேன்" என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சாவர்க்கர்.
" எங்கள் பத்திரிகையின் செய்திக்குழுவில் உள்ளவர்கள், தாடி மீசையில்லாத ஒரு சாதாரண இளைஞரையா இவ்வளவு காலம் எதிர்த்துவந்தோம் என்று நினைப்பார்கள்" என்றார் நிருபர்.
"நல்லதாய்ப்போயிற்று. அவர்கள் எதிர்க்கும் அளவுக்கு உருவத்தோற்றமில்லாத என்னை எதிர்ப்பதை நிறுத்தச் சொல்லுங்கள்" என்றார் சாவர்க்கர்.
இன்னொரு இடத்தில் எஞ்சினியரிங் படிக்க வந்து சாவர்க்கருக்கு அறிமுகமாகிய இளைஞன் திங்ரா வீராவேசத்துடன் பாடிய கவிதையைக் கேட்டு "திங்ரா, உனது வீர முழக்கத்தைக் கேட்டு எனக்குச் சிலிர்ப்பாக இருக்கிறது. வாள்கள். ஆமாம். வாள்கள். வாள்கள் வேண்டும். துப்பாக்கிகள் வேண்டும். லண்டனின் கதவுகளை ரிவால்வர் குண்டுகள் துளைக்க வேண்டும்" என்கிறார் சாவர்க்கர்.
காந்திஜி சாவர்க்கரின் உரையாடல் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
'உயிலும் ஏற்பாடும்' அத்தியாயத்தில் சாவர்க்கர் பிரின்ஸ்டன் சிறையில் இருந்தபோது வ.வே.சு. ஐயருக்கு எழுதிய கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அத்யாயத்திலேயே கப்பலில் இருந்து தப்பித்து வந்த சாவர்க்கரை மறுபடி காவலர்கள் பிடித்து கப்பலுக்குள் அழைத்துச் செல்லும் பகுதியில் "சாவர்க்கர் எஸ். எஸ். மோரியா கப்பலுக்குள் நுழைந்ததும் ஒரு காவலர் அவரைக் கைத்தடியால் பின்மண்டையில் தாக்கினார். சாவர்க்கர் சட்டென்று சுழன்று அதைக் கையில் பிடித்துக்கொண்டு சொன்னார். 'நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல நினைத்தால், உங்களில் ஒருவனையாவது கொன்றுவிட்டுதான் சாவேன்' என்று சொன்னார். அவர் பேசுகிறபோது எப்போதும் ஒரு கம்பீரம் இருக்கும். எப்பேர்ப்பட்ட எதிரியும் அதைக்கண்டு பயப்படுவான்...." இப்படி போகும் பகுதி இதற்கு முந்தைய பக்கத்திலிருந்து இந்த நிகழ்ச்சி முழுக்க மிகுந்த நாடகத்தன்மையுடன் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு அவதார புருஷன் போன்ற தோற்றத்தைக் காட்டுவதற்கான சிரத்தை இதுபோல இந்த நூலில் தெரிவதைச் சற்று தவிர்த்திருக்கலாம்.
பக்கம் 165 இல்,
"ஒரு கைதி அவரிடம் வந்து 'நீங்கள் மார்ஸெயில்ஸ் கடலில் எத்தனை மைல் நீந்தினீர்கள்' என்று கேட்டான்.
'100 மீட்டர் தூரம் நீந்திக் கரை சேர்ந்துவிட்டேன்' என்றார் சாவர்க்கர்.
'அவ்வளவுதானா?' என்று சொல்லிவிட்டு அவன் நகர்ந்து போய்விட்டான். உண்மையை அவர் சொன்னதால் அவர் மேல் அவன் வைத்திருந்த மதிப்பு குறைந்து விட்டது.
ஒரு சீனாக்காரன் அவருடன் பேசினான். 'உங்கள் பெயர் என்ன?' என்று கேட்டான்.
'விநாயக் சாவர்க்கர்'
'என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் சாவர்க்கரா? உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் பெரிய ஆகிருதியுடன் ஆறடிக்கும் மேல் இருப்பீர்கள் என்று நினைத்தேன். இப்படிச் சின்ன அறையில் அடைபட்டுக்கிடக்கிறீர்களே' என்றான். எல்லாவற்றையும் மிகைப்படுத்திப் பார்த்தே மக்கள் மதிப்பு வைக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டார் சாவர்க்கர்." என்று கொடுக்கப்பட்டுள்ளது.
இது இந்த நூலுக்கும் பொருந்தும்.
30. 01. 1948 அன்று மகாத்மா காந்தி கொல்லப்பட்டார். காந்தியைக் கொலை செய்தது தவறு என்று சாவர்க்கர் உடனே அறிக்கை விட்டார். காந்தியின் கொலையில் சாவர்க்கருக்கு பங்கு உண்டு என்றும் சொல்லப்பட்டது. வழக்கு நடந்தபோது அரசாங்க வக்கீல் பேசும்போது,'சாவர்க்கரின் கைப்பாவையாக அவரது ஆணையின் படிதான் கோட்ஸே காந்தியைச் சுட்டான்' என்று கூறினார். அவனுக்குக் கொடுக்கப்பட்ட குற்றப்பத்திரிகைக்குப் பதில் சொல்லும் வகையில் நெடும் அறிக்கை ஒன்றை கோட்ஸே சமர்ப்பித்தான். கோட்ஸேயின் வாக்குமூலத்தில் காந்தியின் மரணத்தில் இவருக்கு பங்கு இல்லை, நாங்களே முழு பொறுப்பு என்பதைச் சொல்கிறான்.
10.2.1949 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. சாட்சியங்கள் ஒத்துப்போகவில்லை என்று சொல்லி சாவர்க்கர் விடுதலை செய்யப்பட்டார்.
சாவர்க்கர் மிகவும் ஆராய்ச்சி செய்து எழுதிய நூல் 'இந்திய வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்' என எடுத்துச் சொல்கிறார் ஆசிரியர். இந்த நூலை வாசிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
வடக்கிருந்து ஆத்ம சம்ர்ப்பணம் செய்தபின்பு அவரின் விருப்பப்படி அவரது உடல் மின்மயானத்தில் எரிக்கப்பட்டது. ஒரு வரலாற்று நாயகனாக சித்தரிக்கப்பட்டவரின் மரணமும் வரலாறாக அமைந்தது.
வீர் சாவர்க்கர் - இலந்தை ராமசாமி
200 பக்கங்கள்
விலை: 80
கிழக்கு பதிப்பகம்
நியூ ஹாரிஸான் மீடியா ப்ரைவேட் லிமிடெட்
எண்: 33/15. எல்டாம்ஸ் சாலை
ஆழ்வார்பேட்டை
சென்னை - 18
வீர் சாவர்க்கார்
Labels: இலந்தை சு.இராமசாமி, வீர் சாவர்க்கர்
2 comments
கைச் சித்திர வேலை - எம்ப்ராய்டரி
ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்று இன்றைக்கு கனவைப்போல இருக்கிறது.
தோழிகள் மாலா, அருணா, நான் மூவரும் கை சித்திர வேலை (எம்ப்ராய்டரி) பழக வேண்டும் என்று விரும்பினோம். அப்படியே தொடர்ந்து கை எம்ப்ராய்டரி போட ஆரம்பித்தோம். ஒரு நாளில் குறைந்தது ஐந்து மணிநேரங்கள்கூட போட்டிருக்கிறோம். காலை பத்து மணிக்கு கை சித்திர வேலை ஆரம்பித்தால் மதியம் மூன்று மணி வரையிலும்கூட பேசியபடி சித்திரவேலை செய்து கொண்டிருப்போம். இது இரண்டு வருடங்கள் தொடர்ந்தது.
ஆனால், இந்த மூன்றரை வருடங்களாக எனக்கு இதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. ஆனாலும் தோழிகள் இருவரும் நூல் வாங்கச் சென்றாலோ, துணி எடுக்கச் சென்றாலோ சண்டை போட்டேனும் என்னை உடன் அழைத்துச் சென்றுவிடுவார்கள்.
இப்போது அவர்கள் இருவரும் இதைச் சின்ன பிசினஸாகச் செய்யலாமா என்னும் யோசனையில் இருந்தனர். உடனே செய்யுங்கள் என்று சொல்லிவிட்டேன்.
இன்றைக்கு இரண்டு மணிநேரங்கள் அவர்கள் செய்த அனைத்தையும் கொண்டுவரச் செய்து புகைப்படம் எடுத்து ப்ளாகில் போட்டாகிவிட்டது.
1. சுடிதார் மெடீரியல்.
இது மாலாவும், அருணாவும் போட்டது

2. டேபிள் க்ளாத்
இது மாலா போட்டது

3. குட்டித் தலையணை
மாலாவும், அருணாவும் போட்டது

4. துப்பட்டாவில் ஒர்க்
மாலா போட்டது

5. சேலை
மதுமிதா போட்டது

6. டாப்ஸ்
அருணா போட்டது

7. ப்ளவ்ஸ் சட்டை
அருணா போட்டது

8. சுடிதார் டாப்ஸ்
அருணா போட்டது

9. சுடிதார் டாப்ஸ்
அருணா போட்டது க்ளோசப்பில்

10. சுடிதார் டாப்ஸ்
மாலா போட்டது க்ளோசப்பில்

எல்லா துணிகளையும் டிஸ்ப்ளே செய்து வீடியோவும் எடுத்து யூ ட்யூபில் போட்டிருக்கிறேன். அப்லோட் ஆனதும் இங்கே லிங்க் தருகிறேன். கையை அசைக்காமல் வீடியோ எடுத்தது, காட்சி ஆடிக்கொண்டே இருப்பது போலல்லாமல் எடுத்தது, இருவருக்குமே பிடித்தது என்று சொன்னது நிறைவாக இருந்தது. இன்னும் சரியாக எடுக்கப் பழக வேண்டும்.
காந்தா, கட்ச், சங்கிலித் தையல், ஹெரிங்போன், காம்புத்தையல், முடிச்சுத் தையல், மிரர் ஒர்க், சம்கி ஒர்க் ........... என எல்லா தையல்களையும் கலந்து கட்டிப் போட்டது.
நான் வடிவமைத்துப் போட்ட நான்கு சேலைகள், ஆறு சுடிதார்கள் இங்கே இல்லை. புகைப்படம் எடுப்பதற்கு முன்பே வாங்கிச் சென்றுவிட்டனர்:)
கையை விட்டுச் சென்ற பிறகு மூன்று வருடங்கள் கழித்து தேடினால் கிடைக்குமா என்ன

Labels: எம்ப்ராய்டரி, கைச் சித்திர வேலை
5 comments
யுகமாயினி - இலக்கியகூடல் ஜூன்

வணக்கம்.
இணைப்பைப் பாருங்கள். அவசியம் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க வேண்டுகிறேன்.
சித்தன்
yugamayini.blogspot.com
vadaly.com
Labels: இலக்கியகூடல், ஜூன், யுகமாயினி
2 comments
நாடகம் நிகழ்வு அழகியல் - நூல் விமர்சனக் கூட்டம்

here is invitation for discussion on my book.please come.
velirangarajan
Labels: நாடகம் நிகழ்வு அழகியல் நூல், விமர்சனக் கூட்டம், வெளி ரங்கராஜன்
1 comments