'ராமய்யாவின் குடிசை' வெளியீட்டு விழா




அழகியல் தேவையில்லை அருமையான பதிவுக்கு

ஞாயிறு-18.12.2005.
ருஷ்யக் கலாச்சார மையம்.
'ராமய்யாவின் குடிசை' கீழவெண்மணி குறித்த ஆவணப்படம் வெளியீட்டு விழா.
ஞாயிறு காலை 10.45 மணி.
'The Roots' வழங்கிய 'ராமய்யாவின் குடிசை' இயக்கியவர் த.மு.எ.ச-வின் சிறந்த பேச்சாளர்,
இயக்குநர் பாரதிகிருஷ்ணகுமார்.

பாரதிராஜா வெளியிட என்.வரதராஜன் பெற்றுக் கொண்டார்.
என்.சங்கரய்யா,கமல்ஹாசன்,கோ.வீரப்பன்,ஜி.ராமகிருஷ்ணன்,பாலுமகேந்திரா,
ஹிந்து என்.ராம்,எஸ்.ஏ.பெருமாள்,எஸ்.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அனைவரின் சிறப்புரையும் சிறந்த உரையாக இருந்தது.
(பாலு மகேந்திரா மட்டும் பாரதி கிருஷ்ணகுமாரை பத்மகுமார் என்றே கடைசி வரை சொல்லிக்கொண்டிருந்தார்.
ஒருவேளை வரும் காலங்களில் பாரதி கிருஷ்ணகுமார் பத்மஸ்ரீ விருது பெறுவார் என்னும் ஞான திருஷ்டியாய் இருந்திருக்க வேண்டும்)

கவிஞர் மு.முருகேஷ்,வெண்ணிலா தொகுத்து வழங்கினர்.
பாரதி கிருஷ்ணகுமாரின் வரவேற்புரையும்,ஏற்புரையும் நெகிழ வைத்தது.

ஆவணப்படம் முகத்தில் அறைந்தார் போல் மறைந்து கிடந்த உண்மையினை வெளியே கொண்டு வந்துள்ளது.
1968-டிசம்பர்-25-ல் நிகழ்ந்த முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு மீண்டும் உயிர் பெற்றது.
64 சாட்சியங்கள்
51 ஆவணங்கள்
இதுவரை வெளிவராத தகவல்கள்,
புகைப்படங்கள்
கருகிய உடல்கள்,பத்திரிக்கை செய்திகள்,பிரேதப் பரிசோதனை அறிக்கை,வெண்மணியில் சேகரிக்கப்பட்ட தியாகிகளின்

அஸ்தி,நினைவு இல்லம்,2003-2004 ஆம் ஆண்டுகளின் நினைவுக் கூட்டம்,
இந்திரா பார்த்தசாரதி,மைதிலி சிவராமன்,ஹிந்து என்.ராம்,கந்தர்வன் ஆகியோரின் உரை
இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகள் இன்னும் பல... ஆவணப்படத்தில்.

44 உயிர்கள் எரிந்தன.
அதிகப்படியான நெல் கேட்டமைக்காக.
யாருமே இந்நிகழ்வுக்காக தண்டனை பெறவில்லை.
கீழவெண்மணி வழக்கில் நிலச்சுவான்தார்கள் அனைவரும் விடுதலை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தஞ்சாவூர் பொம்மை,எருது வருகையில் சிரிப்பொலியில் அரங்கு அதிர்ந்தது.
கருகிய உடல் கண்டு கண்கலங்கியது.

1.இன்ஸ்பெக்டர் உரை,2.தண்டனை பெறாது வெளியே வந்தவரின் வாக்குமூலம் முக்கிய பதிவு.
(எந்த சென்சார் தடையும் இன்றி வந்தது ஆச்சரியமான விஷயமே.)
இன்னும் பல... ஆவணப்படத்தில்.

நேற்று இரவு வெள்ள நிவாரண நிதி பெறுவதற்காக காத்திருந்தவர்களில் இறந்தவர்களுக்காக முதலில் அஞ்சலி செலுத்தப் பட்டது.
அடுத்து கீழவெண்மணி தியாகிகளுக்காக அஞ்சலி.
பிறகு பாலுமகேந்திரா உரையாற்றுகையில் மறுபடியும் நேற்று இரவு வெள்ள நிவாரண நிதி பெறுவதற்காக காத்திருந்தவர்களில் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப் பட்டது.

கீழவெண்மணி தியாகிகளின் அஸ்திக்கு மலர் வைத்தனர் சிறப்பு விருந்தினர்கள்.
இன்று 'ராமய்யாவின் குடிசை'வெளிவந்தது பெருமைக்குரிய விஷயம்.
வந்தவர்கள் கண்கலங்கியும்,இப்போதாவது ஆவணப்படம் வந்ததே என்று மகிழ்ந்தும் வெளியேறினர்.

(மேலும் தகவல்கள்,சிறப்புரைகள் அடுத்த பதிவில்...)

'ராமய்யாவின் குடிசை' விலை:
DVD-350/-
VCD-250/-
இந்தியாவில் தபால்,கூரியர் எனில் 30/-கூடுதல்.

கிடைக்குமிடம்:

The Roots
4/17,நாவலர் தெரு(முதல்மாடி)
தேவராஜன் நகர்,
தசரதபுரம்
சாலிகிராமம்(அஞ்சல்)
சென்னை-600 093


15  மறுமொழிகள்

.

posted by: .  
தகவலுக்கு நன்றி.

அட்டூழியம் செய்த நிலக்கிழார்களில் ஒருவருக்கு மட்டும், பொதுவுடமை கொள்கையாளர்களால் தக்க தண்டனை கொடுக்கப்பட்டதாக சிறுவனாக இருந்த போது கேட்டதுண்டு.. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியாது.. ( கீழ்வெண்மணிக்கு வடக்கே சில காத தூரங்கள் என்னுடைய தாய்வழி சொந்தவூர் ) குறும்படத்தில் நிலக்கிழார் ஒருவரின் கை-கால்கள் வெட்டப்பட்டுவதாக ( மாறுகால், மாறுகை ) காட்சியுண்டா..?

இது போன்ற படங்களை புலம்பெயர்ந்தோர் காண ஏதெனும் வழியுண்டா என்பது தெரிந்தால் சொல்லுங்கள்..

கடந்தகால தமிழர் துயர் குறித்தான ஊடக நினைவூட்டலில், தற்காலத் (ஈழத்) தமிழர்கள் இன்னற்படுவது நின்று விடாமலிருக்க கிரியாஊக்கிகளில் ஒன்றாக செயற்பட்டு வரும் இந்து ராம் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, கண்ணேறு என எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்..

மிக்க நன்றி.

posted by: வாசன்  
The Roots
4/17,நாவலர் தெரு(முதல்மாடி)
தேவராஜன் நகர்,
தசரதபுரம்
சாலிகிராமம்(அஞ்சல்)
சென்னை-600 093

ராமய்யாவின் குடிசை விலை
DVD-300/-
VCD-200/-
இந்தியாவில் தபால்,கூரியர் எனில் 30/-கூடுதல்.

வாசன்
ஆங்கிலத்திலும் இந்த மாதத்திற்குள் வரும் என்று நினைக்கிறேன்.

///இது போன்ற படங்களை புலம்பெயர்ந்தோர் காண ஏதெனும் வழியுண்டா என்பது தெரிந்தால் சொல்லுங்கள்..///
இதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.விரைவில் தெரியும்

அடுத்த பதிவில் மீதி விபரங்கள்...  
மது தகவல்களுக்கு நன்றி.

இ.பாவின் குருதிபுனல் நாவலின் முன்னுரையில் கீழ்வெண்மணி சம்பவத்தை அடிப்படையாய் வைத்து எழுதப் பட்டது
என்று படித்ததாய் நினைவு. புதினம் எந்தளவு உண்மையை சம்மவத்தை வெளிக் கொண்டு வந்தது என்று சொல்லுங்களேன்.
இதைக் குறித்து மற்றவர்கள் கருத்தையும் அறிய ஆவலாய் உள்ளேன்.

posted by: ramachandranusha  
///இ.பாவின் குருதிபுனல் நாவலின் முன்னுரையில் கீழ்வெண்மணி சம்பவத்தை அடிப்படையாய் வைத்து எழுதப் பட்டது
என்று படித்ததாய் நினைவு///

சரியாகச் சொன்னீர்கள் உஷா
பதிவிடுகிறேன்.

DVD-350/-
VCD-250/-
என்று இருக்கணும்.  
மது நல்ல விழாவை பார்க்க வாய்ப்பு கொடுத்ததர்க்கு நன்றி.

posted by: geetha  
அன்பு மதுமிதா,
தகவலுக்கு நன்றி, இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதவும்  
மதுமிதா - இந்தத் தகவலுக்கு நன்றி. நான் விரைவில் வாங்க முயற்சிப்பேன். தாமிரபரணி படுகொலைகளைப் பற்றி எடுக்கப்பட்ட முந்தைய விவரணம் ஒன்றைப் பார்த்திருக்கிறேன். இத்தகைய அவலங்கள் பதிவு செய்யபட வேண்டியது மிகவும் முக்கியம். காலவோட்டத்தின் பிறகு பொறுமையுடன் இந்தக் கோரத்தை மீள்வாசிப்பு செய்யும் எவரும் பாடங்களைப் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

உஷா - கீழ்வெண்மணியை அடிப்படையாகக் கொண்டு இ.பா எழுதிய இந்த நாவல் மிகவும் முக்கியமான ஒன்று. வரலாற்றுக்கு மிக அருகில் புனையப்பட்டிருக்கும் இது, தமிழகக் கம்யூனிஸ்ட்களிடையே (சி.பி.ஐ, சி.பி.எம்) மிகுந்த எதிர்ப்பைப் பெற்றது.

வெங்கட்

posted by: venkat  
நன்றி வெங்கட், இந்த தகவல்கள்
எல்லாம் ஓரளவு முன்பே தெரியும்
என்றாலும், நாவல் உண்மை
சம்பவத்தை எந்தளவு வெளிக் கொண்டு வந்தது என்று சந்தேகம்
இருந்தது.

வெங்கட், "கிருஷ்ணா, கிருஷ்ணா"
படித்தீர்களா? இபாவின் எழுத்து வீச்சு
என்னை பிரமிக்க வைத்தது.

posted by: ramachandranusha  
மதுமிதா, நான் இந்தத் தகவலை எனது ஆங்கிலப்பதிவில் கொடுத்திருக்கிறேன். இது மறக்கப் படக்கூடாத ஒரு நிகழ்வு.

posted by: Chenthil  
I have featured you in Desipundit.

posted by: premalatha  
This post has been removed by a blog administrator.  
கீதா,மஞ்சூர் ராசா,
வெங்கட்,உஷா,செந்தில்,பிரேமலதா நன்றி  
தகவலுக்கு நன்றி மதுமிதா. இ.பாவின் நாவல் பாதிக்கப்பட்டவர்களது குரலாய் இல்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. அது காரணமாய் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்ப்பைப் பெற்றிருக்கலாம். நான் வாசித்ததில்லை. தியாகு எழுதி ஆ.வியில் தொடராய வந்த கம்பிக்குள் வெளிச்சங்களில் கூட இந்தக் கீழ்வெண்மணி தொடர்பான வழக்கு விவரங்கள் வரும்.



posted by: Thangamani  
நேற்றுதான் சோலை சுந்தரப் பெருமாள் எழுதிய செந்நெல் படித்தேன். அது சிறந்த புத்தகம் என்று சொல்ல மாட்டேன், ஆனால் அது சிறந்த ஆவணம் என்று தோன்றுகிறது.

பெரியார் ஈ.வே.ரா. இதற்கு சப்பைக்கட்டு கட்டினதாக ஒரு பேச்சு உண்டு. நிஜம்தானா? கருப்பையா மூப்பனார் எரித்தவர்களின் தலைவனான கோபால கிருஷ்ண நாயுடுவை கேசில் விடுதலை ஆனதும் முன்னின்று வரவேற்றதாகவும் ஒரு பேச்சு உண்டு. இந்த நிகழ்ச்சி பற்றிய அன்றைய தலைவர்கள், பத்திரிகைகள் ஆகியவற்றின் ரியாக்ஷன்கள் இந்த ஆவணப் படத்தில் உண்டா? பார்த்தவர்கள் எழுதுங்களேன்!

பல நாட்களாக புகைந்துகொண்டிருந்த பகை நாயுடுவின் மானேஜர் கொல்லப்பட்டதும் கொழுந்து விட்டு எறிந்ததாக சோலை சுந்தரப் பெருமாள் சித்தரித்திருக்கிறார். மானேஜர் கொல்லப்பட்டது உண்மைதானா?  

Post a Comment