திரைப்படத்துக்கு புது பாடலாசிரியை உதயம்
தோல் பாவை என்னும் சொல்லுக்கு அர்த்தம் என்ன?
சொன்னது கமல்ஹாசன்.
(பதிவின் முடிவில் கமல் உரையில் அறியலாம்)
யார் அந்த புது திரைப்பட பாடலாசிரியை?
ஆண்டாள்பிரியதர்ஷினி
இன்று ஞாயிறு 09.04.06 மாலை 5.30 மணிக்கு ஆண்டாள் பிரியதர்ஷினி கவிதை நூல்கள் வெளியீட்டு விழா.
இடம்: சிவகாமி பெத்தாச்சி அரங்கம் எம்.சி.டி.எம் பள்ளி வளாகம் (ஆழ்வார்பேட்டை அனுமார் கோயில் அருகில்)
'மன்மத எந்திரம்' , 'காதல் நாற்பது' எனும் இரு நூல்கள் வெளியிடப்பட்டன.
விழாமேடை கலை நுணுக்கத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மாலை 6.30க்கு மேலே தான் விழா துவங்கியது.
தலைவர்: பாலுமகேந்திரா
வெளியிடுபவர்: பத்மஸ்ரீ கமல்ஹாசன்
வாழ்த்துரை: மனோஜ்குமார்
லிங்குசாமி
சீமான்
எஸ்.ராமகிருஷ்ணன்
கலைமாமணி கு.ஞானசம்பந்தன்
மரபின்மைந்தன் முத்தையா
கவிஞர்.தெஜிந்தர் சிங் ககன்
குமரன் பதிப்பகம் வைரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தஞ்சை இனியன் அருமையான தொகுப்புரையாற்றினார்.ஒவ்வொருவரை அழைக்கும்போதும் பெயருக்கேற்றபடி அறிமுகஉரை இனிமையாக
இருந்தது.
ஆண்டாள் பிரியதர்ஷினியின் கணவர் பாலரமணி அனைவரையும் வரவேற்றார்.கம்பன் கழகம்,விழாக்கள் என்று எத்தனையோ மேடைகளில்
ஏறியிருக்கிறேன்.ஆனால் இன்று உலக நாயகன் முன்பு பேச இயலவில்லை என்றார்.
குத்துவிளக்கு ஏற்றப்படும் நிகழ்வு:
கமல்ஹாசன்,பாலுமகேந்திரா,கவிஞர்.தெஜிந்தர் சிங் ககன்(இரு முகங்கள் ஏற்றினார்),லிங்குசாமி ஆகியோர் மெழுகுவர்த்தி வைத்து
குத்துவிளக்கில் தீபமேற்றினர்.
நூல் வெளியீடு:
புத்தக வெளியீட்டிற்கு புத்தகத்தை சுற்றி ஒட்டியிருந்த கவரினை பிரிக்க இயலவில்லை.கத்திரி கொண்டுவரப்பட்டது.
அதுவும் ஐந்து விநாடி கழித்தே பிரிக்க உதவி செய்தது.பிரித்ததும் என்ன அருமை,அழகு.
பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய அளவில் இருந்த நூல் வடிவம் சபையோருக்கு காட்டப்பட்டது.
பிறகு நூலினை கமல் பாலுமகேந்திராவிடம் அளித்தார்.புத்தகத்தின் மேல் சின்ன ரிப்பனால் கட்டியிருந்ததை அவிழ்க்காமலேயே.
மற்றொரு நூலினை கவிஞர்.தெஜிந்தர் சிங் ககன் பெற்றுக்கொண்டார்.இவர் பொதிகையின் பொறுப்பாளர்.
(அங்கங்கே கைதட்டல்,புகைப்பட ப்ளாஷ் என்று போட்டு படிச்சுக்கணும்.)
(அப்படியே இடையிடையே பொக்கே,சால்வை,நினைவுப்பரிசுகள் கொடுக்கப்பட்டன)
பாலுமகேந்திரா:
தம்பதியினர் இருவரும் ஒரே துறையில் இப்படி அமைவது கொடுப்பினை.இதற்கு ஆண்டாள்பிரியதர்ஷினி,பாலரமணி இருவரையும் வாழ்த்துகிறேன்.
எல்லோருக்கும் இப்படி அமையாது தாம்பத்தியம்.
இளம்வயதில் வரும் காதல் மாயை.அதனைக்கடந்து விட்டால் அடுத்து நாற்பது வயதிலும் ஒரு மாயை வரும்.அதனையும் கடந்துவிடவேண்டும். திருமணத்திற்குப் பின்னான காதல் காதலாக இருப்பதில்லை.எப்படி மறைந்துவிடுகிறது.எப்படி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று ஆண்டாள் காதல் நாற்பதில் கவிதையாய் கொடுத்துள்ளார்.மன்மத எந்திரம் பாலியல் தொழிலாளியின் வலி,ரணம்,வேதனையினை வெளிப்படுத்தியுள்ளது.
இந்நூலுக்கு இத்தனை தரமான காகிதம்,புகைப்படம் போட்டிருக்கக்கூடாது.
கடினமான காகிதத்தில் போட்டிருக்கவேண்டும்.
மனோஜ்குமார்:
(இயக்குநர்)
இரண்டு வருடங்களுக்கு முன்பு தஞ்சையில் ஒரு நிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.அங்கே ஒரு பெண்மணி அனைவரையும் அங்கே இங்கே
நகரவிடாது பேச்சால் கட்டிப்போட்டுவிட்டார்.பிறகுதான் தெரிந்தது அவர் பொதிகை ஆண்டாள்பிரியதர்ஷினி என்று.நூல் முழுமையாய் வாசிக்கவில்லை.
ஆனால் ஒருவரி என்னை அசைத்துவிட்டது.அந்த வரியினால் எனது ஆர்யா படத்தில் ஆண்டாள்பிரியதர்ஷினி பாடல் எழுதப்போகிறார் என்று இங்கே அறிவிக்கிறேன்.
கவிஞர்.தெஜிந்தர் சிங் ககன்:
(ஹிந்தியில் சாஹித்ய அகாடமி பரிசு வாங்கியவர்,கவிஞர்) ஆங்கிலத்தில் பேசினார்.
நூலின் உட்பொருள் தெரிகிறது.ஆனால் தமிழ் வாசிக்க அறியாததால் ஊனமுற்றவனாய் உங்கள் முன் நிற்கிறேன்.தேவையான கருத்து
அருமையான பெண்மணியால் அளிக்கப்பட்டுள்ளது.வாழ்த்துகிறேன்.
(தொடரும்)

14 மறுமொழிகள்
//திரைப்படத்துக்கு புது பாடலாசிரியை உதயம்//
நீங்க தானோன்னு நினைத்து ஆர்வத்துடன் படிக்க வந்தேன்.
- இப்னு ஹம்துன்
posted by: IBNU HAMDUN

இன்று ஆண்டாள் !
நாளை மது!
வாழ்த்துக்கள்
கவிதாயினிகளே!
- அப்படியே ஆகட்டும்
- (ததாஸ்து)
பிகு: தரமான பாடல்களைத் தரட்டும்.
posted by:
நாளை மது!
வாழ்த்துக்கள்
கவிதாயினிகளே!
- அப்படியே ஆகட்டும்
- (ததாஸ்து)
பிகு: தரமான பாடல்களைத் தரட்டும்.
posted by:
மதுமிதா தகவலுக்கு நன்றி,
ஆண்டாள்பிரியதர்சினி அவர்களின் புத்தக வெளியீட்டுவிழா அழைப்பிதழ் வந்திருந்தது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் நேற்று அங்கு போகமுடியவில்லை.
புத்தக வெளியீட்டுவிழா பற்றிய தகவலை விருபா தகவல் தளத்தில் இணைத்திருருக்கிறோம்.
அன்புடன்,
விருபா
posted by: விருபா

சில மாதங்களுக்கு முன்பாக பொதிகையில் ஒளிபரப்பபட்ட கம்பன் கழக விழாவில் ஒரு பெண்மணி உரையாற்றினார். மிக மிக அருமையாக இருந்தது. அவர் நீங்கள் கூறும் ஆண்டாள் பிரியதர்ஷினியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
அவர் பேசிய விதத்தில் தான் என்ன நேர்த்தி, அழகு, தெளிவு!. அற்புதம்.
ஆனால் அவர் தான் இவரா எனத் தெரியவில்லை. ஒரு வேளை புகைப்படம் கிடைத்தால் சொல்லலாம்.
நன்றி
posted by: ஸ்ருசல்

////திரைப்படத்துக்கு புது பாடலாசிரியை உதயம்//
நீங்க தானோன்னு நினைத்து ஆர்வத்துடன் படிக்க வந்தேன்.
- இப்னு ஹம்துன்//
ரிப்பீட்டே!
அவருக்கு வாழ்த்துக்கள்!