எல்லாமே சமமாச்சு...( ஜூலை தேன்கூடு போட்டிக்கு)




எரி
புதை
சமாதி செய்

எல்லாமே சமமாச்சு
எல்லாம் கடந்த பின்பு


16  மறுமொழிகள்

கவிதை நல்லா இருக்குங்க போட்டிக்கான வாழ்த்துக்கள்

posted by: sabasuthesh  
நன்றி சுதேசன்
ஆனா போட்டியில் தேர்ந்தெடுக்கும் முறை தெரியலியே;-(  
மதங்களை கடந்த ஒரு நிகழ்வு மரணம் மட்டுமே என்பது சரிதான். வாழ்த்துக்கள்

பின்குறிப்பு: வலைப்பூ விவரம் இப்போ கொடுக்கலாமா?

ஹி ஹி எதிலயும் லேட்டா போய் பழக்கமாச்சு அதான்.

posted by: உமா கதிர்  
வாங்க தம்பி உமாகதிர்
நன்றிங்க

///
பின்குறிப்பு: வலைப்பூ விவரம் இப்போ கொடுக்கலாமா?
///
பரவாயில்லை கொடுங்க

டுபுக்கு விடமும் கொடுக்கச் சொல்லணும்  
short and sweet- the poetry! [not death :( ]  
அங்க தெக்கி எரிக்கவா புதைக்கவான்னு கேட்கறாரு. நீங்க இப்படி எல்லாமே ஒண்ணுன்னு சொல்லறீங்க. வந்து உதைக்கப் போறாரு! :)  
நன்றி ஜெய. சந்திரசேகரன்

இலவசக்கொத்தனார் எல்லாத்துக்கப்புறம் என்னங்க ஆகும்?

தெக்கிட்டயே கேளுங்க
எரிச்சாலும், புதைச்சாலும் அதுக்கப்புறம் என்ன ஆகும்னு.

தெக்கியினுடையது வாசிக்கலியே:-(  
சாம்பலாச்சு
மண்ணாச்சு
எலும்புக்கூடாச்சு

எதுவும் சமனாகவில்லை!

அததற்கு ஒரு காலம் உண்டு!

வாழ்த்துகள்!  
வாங்க எஸ்.கே

///
சாம்பலாச்சு
மண்ணாச்சு
எலும்புக்கூடாச்சு
எதுவும் சமனாகவில்லை!
///


ஆமாங்க சாம்பலானாலும், மண்ணானாலும், எலும்புக்கூடானாலும் எல்லாத்துக்கும் உயிர் போயாச்சுங்களே!

உயிர் போறது எல்லாருக்கும் சமம் தானே எப்படிப் போனாலும்.

அதுக்கப்புறமா நாம செய்யற சடங்குகள் தானே இவையெல்லாம்.


/// அததற்கு ஒரு காலம் உண்டு///

ஆமாம் எஸ்.கே. அததற்கு ஒரு காலம் உண்டு. அதையதை புரிந்து கொள்வதற்கும்.

நன்றி  
இதுதாங்க தெக்கியோட எரிக்கவா புதைக்கவா பதிவு. படிச்சிப் பாருங்க.

108 பின்னூட்டம் வாங்கியிருக்கு. இதை படிக்கலைன்னு சொல்லறீங்க. சமீபத்தில் 550 பின்னூட்டம் வாங்கின என் பதிவையாவது படிச்சீங்களா இல்லையா? :)  
உயிர் போனதும் சவமாகி சமனாவதை ஒப்புக் கொள்கிறேன்.
ஆனால், நீங்கள் அதற்குப் பின் செய்யும் நிகழ்வுகளைப் போட்டதால் அப்படி எழுதினேன்.
தவறாக எண்ண வேண்டாம்.  
கொத்ஸ் இரண்டு பதிவும் படிச்சாச்சு

எஸ்.கே இதில் தவறாக நினைக்க எதுவும் இல்லைங்க.  
எல்லாம் சமமாச்சு, மண்ணோடு மண்ணாப்போச்சு.
குட்டைக் கவிதையில், புதைந்திருக்கிறது வானம்.  
அடெடா,

இதோ எப்படியே மிஸ் பண்ணி இருக்கிறேனே.

இலவசம், ரொம்ப நண்றிப்ப என் சுட்டியை கொடுத்து 'மது'மிதாவை அங்க வந்து கொஞ்சம் படிக்க வைச்சதுக்கு.

//எரி
புதை
சமாதி செய்

எல்லாமே சமமாச்சு
எல்லாம் கடந்த பின்பு//

அப்படின்னு சொல்லிட்டீங்களே, அது எப்படி சமமாகும், புதைச்ச இன்னும் மேடாகவோ அல்லது கல்வெர்ட்-ஆகவோ அல்லவ நிற்கிறது. ஒரு எடத்திலே பார்த்தேங்க, கல்லறைங்கள சும்மா ஆயிரக்கணக்க கண்ணு கட்டிகிட்டு வந்துருச்சு, மின்னோசோட்டவில. சின்ன பசங்களையும் மிரட்டுற மாதிரி இருப்பதால் நான் எப்பொழுதுமே எரிப்பதைத்தான் ரெகமெண்ட் பண்ணுவேன்.

என்னோட ஃபேன்ஸ்களுங்கு (இங்க உள்ள கிழங் கட்டைகளுக்கு) :-)

நல்ல ஃபோட்டோங்க :-)))  
///
MSV Muthu said...
எல்லாம் சமமாச்சு, மண்ணோடு மண்ணாப்போச்சு.
குட்டைக் கவிதையில், புதைந்திருக்கிறது வானம்.
///

நன்றி MSV Muthu.


///
நான் எப்பொழுதுமே எரிப்பதைத்தான் ரெகமெண்ட் பண்ணுவேன்.
///

நல்லது Thekkikattan.
ஆனா எஸ்.கே க்கு சொன்ன பதிலைப் பாருங்க  
தமிழோவியம், தேன்கூடு, இளவஞ்சி, போட்டியில் கலந்து கொண்டோர் மற்றும் வாக்களித்த ஏழுபேருக்கும் மனமார்ந்த நன்றிங்க  

Post a Comment