தொடரும் கேள்விகள்...(சிறுகதை- ஜூலை தேன்கூடு போட்டிக்கு)
பௌர்ணமி இரவு. வெண்ணிலா வெண்கரங்களால் ஒளியினை வானமெங்கிலும் அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் கொஞ்சம் மங்கிய ஒளியில் மினுமினுத்துக் கொண்டிருந்தன. ஒரே ஒரு பறவை கரிய நிறத்தில் பறந்தது. இறகசையும் ஓசை சிறிதும் கேட்கவில்லை. இது நேரம் வரை கூடடையாததற்கு என்ன காரணம் இருக்க முடியும்? இரையெடுத்து திரும்புகையில் நேரமாயிற்றா? கூட்டத்திலிருந்து தனியே பிரிந்து விட்டதா?
மொட்டை மாடியில் மெதுவாய் நடந்து கொண்டிருந்தவள் படியில் அமர்ந்தாள்.
குளிர்ந்து வீசிய தென்றல் காற்றினால் அகல்யாவின் மனப்புழுக்கத்தை துடைத்தெறிய இயலவில்லை.
கேள்விகள் அவளைப் பந்தாடி சுழற்றியடித்துக் கொண்டிருந்தன. சொந்த ஊர் என்பது எது?
பிறந்த ஊரா? வளர்ந்த ஊரா? புக்ககம் புகுந்த ஊரா?
மாற்றலாகி நாடு நாடாகச் செல்கையில் எந்த ஊர் சொந்த ஊர்?
எத்தனையோ மகிழ்வாகத்தான் பிறந்த ஊருக்கு வந்திருந்தாள், முழுதாய் மூன்று வருடங்களுக்குப் பிறகு.
இந்த பத்து வருடங்களில் அவளின் வெளிநாட்டு வாசம் எத்தனையோ வகைகளில் அகல்யாவுக்கு விரிந்த பார்வையை அளித்திருந்தது. எனினும் பிறந்த ஊருக்கு வருகிறோமென்றால் அவளுக்கு அலாதி இன்பம்.சிறுவர்களிடம் விளையாடுவதும், முதியோரிடம் கதை பேசிக்கொண்டிருப்பதும் அவளுக்கு ஒரே நேரத்தில் சாத்தியமாகும். அதுவும் அவள் வயதையத்த பழைய சிநேகிதிகளிடம் பேச வேண்டுமென்றால் இது நாள் வரை விட்டகுறை தொட்டகுறையெல்லாம் தீர்த்து விடும் ஆவேசத்துடன் அனைவரும் சேர்ந்து கொண்டு அடிக்கும் கூத்து ஊரே ரெண்டு படும். இம்முறையும் ஒரு மாதம் இங்கே தங்க வேண்டுமென்று வந்தவள் தான்.
*
அதிகாலை ஐந்து மணிக்கு ஊர் வந்து சேர்ந்திருந்தாள். வீட்டுக்குள் நுழையும் போதே, கேட்டருகில் நாயின் குரல். திரும்பினாள் அகல்யா. ஐந்தடி உயரத்தில் சுடிதார் அணிந்த ஒரு பெண் கையில் கயிறு ஒன்றைப் பிடித்திருந்தாள். இந்த தெருவுக்குள் இன்னும் வரவில்லை. அகல்யா பின்னால் வந்து எட்டிப் பார்த்தாள். நாயைக்கட்டிய கயிற்றினை அப்பெண் பிடித்திருந்தாள்.
ஓ! மார்னிங் வாக். நடைப்பயிற்சிக்கு துணை இந்த நாயா ?
அல்லது நாயின் நடைப்பயிற்சிக்கு இந்தப் பெண் செல்கிறாளா?
"அகல்யா" "என்னம்மா உள்ளே வராமல்..."
"இதோ வந்துட்டேனம்மா"
அவ்வளவு தான்.
ஓடி வந்து அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் கல்லூரிப்பெண்ணாய்.
வந்து இந்த ஐந்து நாட்களாக மகிழ்வாய் நாட்கள் கடந்ததே தெரியவில்லை.
ஆட்டம், பேச்சு, நட்பு, உறவு என எல்லோரையும் சந்தித்த மகிழ்வில் திளைத்தாள்.
*
இன்று மாலை கணவன் ராகேஷ் தொலைபேசியில் அழைத்தான்.
"என்னங்க எப்ப வர்றீங்க?"
"லீவ் கிடைக்கலைம்மா. நீயே வந்துவிடு, உன்னை அழைக்க இந்தியாவுக்கு வரவியலாது"
"சரி. தெரிந்தது தானே. என்ன பாஸ் வந்துட்டாரா?"
"ஆமாம் அகல்யா. இருபது நாட்கள் இருப்பாராம். என்னால் வரமுடியவில்லைம்மா. நீ வந்துவிடுவாய் தானே. எப்போது வருகிறாய்?"
"ப்ளீஸ் ராகேஷ். இந்த மாதம் முழுவதும் இருக்கிறேனே. எனக்கும் உங்களைப் பார்க்க இருபது நாளாகுமென்றால் மலைப்பாகத்தானிருக்கிறது. ஆனால், மறுபடியும் இங்கே வரணுமென்றால், இன்னும் மூன்று வருடங்களாகிவிடுமே ராகேஷ்."
" சரிம்மா. நாளை பேசுகிறேன். உன் விருப்பம் போல் முடிவெடு."
*
"அம்மா ராகேஷ் பேசிட்டார். அனு வீடு வரைக்கும் போய் வருகிறேனம்மா" என்றவள் பதிலுக்கு காத்திராமல் சிட்டாய் வாசலுக்குப் பறந்தாள்.
தெரு முனையில் ஆறுபேர் குழு ஒன்று காத்திருந்தது அகல்யாவின் வரவுக்கு. தினமும் ஒருமணிநேரம் இவர்களுடன் தான் அரட்டை.
என்ன ஒருவர் முகமும் சரியில்லை. குசு குசு வென்று சன்னமான குரலில் பேச்சு வேறு. என்ன ஆச்சு?
"அகிலாவை ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறார்கள்" அருணா
ஒவ்வொருவராக அப்போது தான் வந்து சேர்ந்திருக்கிறார்கள் போலுள்ளது.
அருணா தவிர யாருக்கும் விபரம் எதுவும் தெரியவில்லை.
"என்ன அருணா. அகிலா யார்? அவளுக்கு என்ன?"
" காலையில் தினமும் நாயை அழைத்து வாகிங் வருவாளே..."
ஊருக்கு வந்த நாள் அப்பெண்ணைப் பார்த்த நினைவு வந்தது.
அதற்கு இரண்டு நாட்கள் கழித்து அப்பெண்ணை நர்சரியில் யதேச்சையாய் சந்திக்கையில் மிக நட்புடன் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அகல்யாவுக்குத் தேவையான ரோஜாச் செடியினை அப்பெண் தான்
வாங்கிக் கொடுத்தாள்.
"ஆமாம். அவளுக்கென்ன?"
"ஒண்ணுமில்லை. உடலில் நெருப்பு வைத்துக் கொண்டாளாம்" அருணா
"என்ன சொல்றே அருணா. வாசல் தெளிக்கையில் அவளைப் பார்த்தேனே" சிநேகா
"அதுக்குப் பிறகு உள்ளே சமைக்க வந்தவள் தான் இப்படி செய்து விட்டாள்" அனு
" ஒண்ணும் இல்லை. அகிலாவுடைய புருஷன் தான் அவள் மேலே மண்ணென்ணெய் ஊற்றி பத்த வைத்து விட்டானாம்."
"இப்படி நடக்கும்னு அப்பவே நெனச்சேன்"
" என்ன நடக்குது இங்கே?" அகல்யா
"அகல்யா. உனக்கு ஒண்ணும் தெரியாது. சும்மா இரு'
" என்னது. புருஷன் பொண்ணை கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறான். நீங்க அதுக்கு சப்போர்ட்டா?"
" உனக்கு ஒண்ணும் தெரியாது அகல்யா. அவள் சரியில்ல"
" என்ன சரியில்ல"
"ரெண்டு மாசத்துக்கொரு முறை எங்கேயோ போயிடுவா யாரையோ பாக்க. அங்கிருந்து போன் செய்தா புருஷன் போயி அழைச்சிட்டு வருவான். இது நாலஞ்சு முறை நடந்திருக்கு"
"அப்ப இவன் ஏன் போயி அவள அழைச்சிட்டு வர்றான். அங்கேயே விட்டுட வேண்டியது தானே."
"அவதான் அவனோட தான் இருப்பேன்னு சொல்லி திரும்பி வந்துடறா. அவ அம்மா கூட இந்த
விஷயத்துல தலையிடறதில்ல."
"வேற யாரும் இல்லையா என்னன்னு கேட்க?"
" யாரும் இல்லை. இதுக்கு முன்னாடி ரெண்டு தடவை சூடு போட்டான். முகத்தில காயம் குக்கர் -ல பட்டதுன்னு சொல்லிட்டா. கீழயும் சூடு போட்டிருப்பான் போலிருக்கு. நடக்க முடியாம அவ்வளவு சிரமப்பட்டா"
"நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க. ஏன் அவன் இப்படி செய்யறான்னு கேட்க வேண்டியதுதானே"
" அவ மேல தப்பு இருக்கு. யாரு போயி என்ன கேக்கறது"
" என்னதிது எல்லோருமே அவ மேல தப்பு இருக்குன்னு இதையே திருப்பி திருப்பி சொல்லிட்டிருக்கிறீங்க"
" வேற என்ன சொல்றது. பாவம் புருஷன் காரன் தான் இப்பதான் வந்து வாழைஇலையெல்லாம் எடுத்துட்டு போறான் ஜி.ஹெச்சுக்கு."
" போலீசுக்கு நீங்க சொல்ல வேண்டியது தானே"
" போலீஸ் அப்பவே வந்தாச்சு. அகிலா சமையல் செய்யறப்ப நெருப்பு புடிச்சதுன்னு சொல்லிட்டாளாம்"
" என்ன கொடுமை இது"
"அகல்யா. நீ பேசாம இரு. இங்க யாரும் அவன பகைச்சுக்க மாட்டாங்க. எல்லாத்துக்கும் மேலே அவ மேலே தப்பு இருக்கிறதனாலே...."
அகல்யா வீட்டுக்கு திரும்பியவள் சாப்பிடாது மாடி ஏறியவள் தான். கேள்விகள் அவளைத் தின்று கொண்டிருந்தன.
இது என்ன சாடிசம். ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு தண்டனை தேவையா? நியாயங்கள் எங்கே மாறுபடுகின்றன? எல்லோரும் இதனை சரியான பார்வையில் பார்க்க நாம் மட்டும் தவறான பார்வையில் பார்க்கிறோமா? ஏன் இந்த முடிவைத் தேர்ந்தெடுத்தாள்?
அந்தப் பெண் எவ்வளவு சுதந்திரமானவளாக இருந்தாள்?
அந்த ரோஜாசெடியின் அழகும், மணமும் தான் அவளுக்கு எவ்வளவு பிடித்தமானதாக இருந்தது?
ஏன் அவள் தன் கணவனைக் காட்டித்தரவில்லை. தன் மரணத்திற்கு தானே ஏன் பொறுப்பேற்றுக் கொண்டாள். கொடுமை செய்யும் கணவனின் மேல் இன்னும் அதீத பாசமா? என்றால் இந்த நேசம் உண்மையாய் இருக்க முடியுமா?
"அகல்யா என்னம்மா இன்னும் இங்கே. கீழே வா. சாப்பிட்டு படு"
கீழே வந்தவள் இயந்திரமாய் சாப்பிட்டாள். படுத்தவள் தூக்கமின்றி படுத்துக் கிடந்தாள். அதிகாலை ஐந்து மணிக்கு மெல்ல கண்ணயர்ந்தாள்.
*
காலையில் சந்தடி சத்தத்தில் எழுந்தாள் அகல்யா. பெரிய வண்டி அவர்கள் வீட்டை கடந்து செல்ல பின்னாலேயே போலீஸ் ஜீப்.
அகல்யா வெளியே ஓடி வந்தாள்.
ஆம் அகிலா இறந்து விட்டாள். மூன்று தெருவிலிருந்தும் கூட்டம் கும்பல் கும்பலாய்.
மூடிய வெள்ளைத்துணியின் உள்ளே அந்த கருகிய மலர்.
'உச் உச் உச்' என்ற ஒலி தவிர வேறு பேச்சில்லை. யாரும் அருகே செல்லவில்லை.
அகிலாவின் அம்மாவிற்கு அவள் உடல் வண்டியிலேயே (வெள்ளைத்துணியால் மூடியது தான்)
காட்டப்பட்டது. அவர் வாயைப் பொத்தி ஒரே அழுகையோடு உள்ளே சென்று விட்டார்.
கணவன் அகிலாவின் சிதைக்கு தீ மூட்ட வேண்டுமென்று அதே வண்டியில் ஏறிக் கொண்டான்.
நாய் மட்டும் மூன்று முறை வண்டியைச் சுற்றி வந்து பெருங்குரலெடுத்து ஊளையிட்டது. வண்டியின் பின்னே சற்று தூரம் ஓடி விட்டு வீட்டுக்கு திரும்பி விட்டது. இரவிலிருந்தே சாப்பிடவில்லையாம்.
இரவு தொலைபேசியில் ராகேஷ் அழைத்தான்.
"அடுத்த பிளைட்டில் டிக்கட் எடுங்க. எனக்கு உடனே அங்கே வரணும்" என்றாள் அகல்யா.
"அய்யோ அந்த நாய் இறந்துவிட்டதாம்" வெளியே கச கச வென மறுபடியும் பேச்சுக் குரல்.

14 மறுமொழிகள்
துளசிம்மா தலைபாரம் இன்னும் நீங்கவில்லை.கேள்விகளைத் தூக்கி எங்கேயாவது எறிந்து விட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
ஏன் துளசி ஏன் முடியவில்லை
ஏன் துளசி ஏன் முடியவில்லை
மது
எனது பள்ளித் தோழி ஸ்டவ் வெடித்து இறந்து போனாள்!!!
அவள் நினைவு வந்துவிட்டது. உண்மையாக நீங்கள் பார்த்த நிகழ்வுதானோ?
posted by: nila

மனசே சரியில்லை அக்கா :(
இப்படி செய்துட்டீங்களே? இன்னமும் இதுபோன்ற அரக்கர்கள் இந்த உலகில் இருக்கத்தானே செய்கின்றனர்? அவர்களை எத்தனை நெருப்புவைத்துக்கொல்வது? பாவம் அகிலா...:((
posted by: ஸ்ரீஷிவ்

அக்கா,
நடந்த சம்பவம்ன்னு சொல்லிட்டீங்க. ஒண்ணும் சொல்லறதுக்கு இல்லை. இப்படிப் பட்ட அனுபவங்கள் இனி யாருக்கும் வாய்க்காமல் இருந்தால் போதும்.
posted by: இ.கொ.

பல கஷ்டமான நினைவுகளை கிளறி விட்டீர்கள்! ஓட்டுப் போடறதா வேண்டாமா? அவளது நாய் கூட தேவலை, அந்த கணவனுக்கு!
அதை ஏன் கேட்கிறீங்க
இன்னும் மறக்க முடியாத கஷ்டத்தை யார்ட்ட சொல்லறது.
///
பல கஷ்டமான நினைவுகளை கிளறி விட்டீர்கள்! ஓட்டுப் போடறதா வேண்டாமா? அவளது நாய் கூட தேவலை, அந்த கணவனுக்கு!
///
என்னங்க கேள்வி இது
ஜெய. சந்திரசேகரன்
ஓட்டு போடவேணான்னு யாராவது சொல்லுவாங்களா?????

/// செந்தழல் ரவி said...
நீங்க ஜெயிச்சீங்களா - இல்லையா? ///
ஜெயிச்சது நிஜம் செந்தழல் ரவி
காரணம் இருக்கு
மறுபடி வரும்போது சொல்கிறேன்
கீழே பாருங்க
இதுவும் ஒரு காரணம்
///Anitha Pavankumar said...
Manasukku romba kasthama irunduchhunga..inda kadaia padichittu ///
நான் இன்னும் இதிலிருந்து வெளிவரவில்லை அனிதா பவன்குமார்
நன்றிம்மா தங்கள் கருத்துக்கு