லிப்ட் கிடைக்குமா? (தேன்கூடு போட்டி)

ஒவ்வொரு மனிதனுள்ளும்
எத்தனை
லிப்ட் ஆபரேட்டர்கள்
வாழ்க்கைக்கான
லிப்ட்டிற்காக
லிப்ட் கிடைக்குமாவென
கலையாது
காத்திருந்தபடி
*
வீடோ
அலுவலகமோ
விற்பனைக்கடையோ
ஒவ்வொரு
அடுக்குமாடி கட்டடத்திலும்
கிறுகிறுக்கும் உணர்வினை
ரசனையை
மகிழ்வை
புழுக்கத்தை
வெளிக்காட்டாது
இயந்திர மனிதனாய்
வாழ்க்கையின்
மேடுபள்ளங்களை
சரி செய்ய
மேலும் கீழும்
கீழும் மேலும்
ஏறி இறங்கி
ஏறி இறங்குகிறான்
ஓய்வின்றி
லிப்ட் ஆபரேட்டர்
*
ஒவ்வொரு மனிதனுள்ளும்
எத்தனை
லிப்ட் ஆபரேட்டர்கள்
வாழ்க்கைக்கான
லிப்ட்டிற்காக
லிப்ட் கிடைக்குமாவென
கலையாது
காத்திருந்தபடி
8 மறுமொழிகள்
யதார்த்தமான கவிதை மதுமிதா.
நானும் டிரை பண்ணிப்பார்க்கிறேன்:
ஏற்றமும் இறக்கமும்
வாழ்விலே உண்டு!
நீயும் ஒரு லிப்ட்
தானடா மண்டு!
கண்டுக்காதீங்க விட்ருங்க. :))
நானும் டிரை பண்ணிப்பார்க்கிறேன்:
ஏற்றமும் இறக்கமும்
வாழ்விலே உண்டு!
நீயும் ஒரு லிப்ட்
தானடா மண்டு!
கண்டுக்காதீங்க விட்ருங்க. :))


